தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்... லாப நோக்கம் எதுவுமில்ல... ஜாய் ஆலுக்காஸ் பளிச்!

 
தாய்மாமன் தங்க மோதிரம்

 

தமிழக அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் லாப நோக்கம் ஏதுமின்றி, மக்களுக்குத் திரும்ப வழங்கும் நோக்கிலேயே இணைந்துள்ளதாக முன்னணி நகை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அந்நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

"தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் எங்களுக்கு லாப நோக்கமில்லை.." - ஜாய் ஆலுக்காஸ்

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து தங்க மோதிரங்களும் உயர்ந்த தூய்மை, ஹால்மார்க் முத்திரை மற்றும் நேர்த்தியான கைவினைத்திறனுடன் மிகத் தரமாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்குச் சிறந்த சேைவ வழங்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலனை முன்னிறுத்தித் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் இணைந்து சேவையாற்றுவதில் பெருமிதம் கொள்வதாக ஜாய் ஆலுக்காஸ் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.