தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வில் வினாத்தாள் கசிந்தது - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

 
நட்டா

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எந்தவொரு விரிவான விவாதத்திற்கும் மத்திய அரசு தயார் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, வினாத்தாள் கசிவு விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் அரசியலாக்குவதாகக் குற்றம் சாட்டினார்: தமிழ்நாடு, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

டெல்லி நீட்

குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தான் தேர்வுத்தாள் கசிவு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார். மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வித் தரத்தைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்ட அமைச்சர் நட்டா, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எத்தனை மணி நேரம் விவாதம் செய்யக் கோரினாலும் அதற்கு மத்திய அரசு முழுமையாகத் தயார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர் நலனை விடவும் இப் பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேடவே முயற்சிக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அவர்கள் விவாதிக்க விரும்புவதில்லை எனக் கடுமையாக விமர்சித்தார்.

டெல்லி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகத் தெரிவித்த அவர், "சோனம் வாங்சுக் அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் நேரில் சென்று விசாரித்தோம். அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, மாணவர்களைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர் எழுதியுள்ள திறந்த கடிதத்திற்குப் பதிலளித்துத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்றார்.