4 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம் !

 
மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் புதிய வழிக்காட்டுதல்..!!

நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக 4 நீதிபதிகளை நியமனம் செய்ய உச்ச நீதிமன்றக் கொலிஜீயம் பரிந்துரைத்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் வி.காமேஸ்வர் ராவ் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர வி. குகே கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்படப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

விசாரணை  உச்சநீதிமன்றம்

இதனைத் தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் செல்கிறார். இதேபோல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்வினி குமார் மிஸ்ரா அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்படுகிறார். நீதித்துறையின் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலும் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் நோக்கத்துடனும் இந்த முக்கியப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றம்

இந்தத் தலைமை நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகள் உரிய ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் நாட்டின் முக்கிய உயர் நீதிமன்றங்களில் நிர்வாகப் பணிகள் மேலும் சீராக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.