ஜூலை 24ம் தேதி +2 துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!!

 
தேர்வு

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  மே மாதம் 8ம் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை பொறுத்தவரை வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.  தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 94.03% பேர் தேர்ச்சி பெற்றனர். அதில்  மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருந்தனர்.  தேர்வில் தோல்வியடைந்தவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

 தேர்வு

பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். நிச்சயம் மறுதேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம் எனவேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி  பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு   ஜூன் 19ம் தேதி துணைத்தேர்வு நடத்தப்பட்டது.  

 தேர்வு முடிவுகள்

12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934 பேரும் விண்ணப்பித்து துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.  இந்நிலையில் ஜூலை 24ம் தேதி பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம்  அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளை dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதளத்தின் மூலம்    மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web