மாணவர்களே தயாரா?! ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறப்பு!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா, பண்டிகைகள், திருவிழாக்களில் கலந்து கொண்டு விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்தி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருப்பது மாணவர்கள், பெற்றோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.