ஜூனியர் விகடனுக்கு ரூ.25 லட்சம் அபராதம்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
ஜூவி டி.ஆர். பாலு


 
தமிழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு. இவர் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராவார். இவர்  2014 ம் ஆண்டு  சிவில் மான நஷ்டஈடு வழக்கை  தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில்,  2012 ம் ஆண்டு ஜூனியர் விகடன் வார இதழில் கேள்வி பதில் பகுதியில் சேது சமுத்திரத் திட்டத்தில், தான் முறைகேட்டில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்டிருந்ததாகவும் அதேபோல் திமுக செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பேசியதாகவும் பொய்யான செய்திகளை வெளியிட்டதாக கூறியிருந்தார்.

டி ஆர் பாலு

இதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடப்பட்டதாகவும் இந்த செய்திகள்  முழுக்க அவதூறு செய்தி ஆதாரமற்றவை எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும்  தன்னைப் பற்றியோ தனது குடும்பத்தினரை பற்றியோ செய்திகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் தனக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை  உயர்நீதிமன்றம், டி.ஆர்.பாலு தொடர்பான செய்திகள் வெளியிட ஜூனியர் விகடன் வார இதழுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இறுதி விசாரணை நீதிபதி ஏஏ நக்கீரன் முன்பு நடைபெற்றது. டி ஆர் பாலு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி, டி ஆர் பாலுவுக்கு மான நஷ்ட ஈடாக ரூ 25 லட்சம்  வழங்க வேண்டும் என ஜூனியர் விகடன் வார இதழுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web