#JUST IN: 98-வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: மேடையில் மிரட்டிய 'ஃபிராங்கண்ஸ்டைன்'.. சிறந்த துணை நடிகையாக ஏமி மேடிகன் தேர்வு - திரைக்கதைக்கான விருதைத் தட்டிச் சென்றது 'சின்னர்ஸ்'!

 
ஆஸ்கர் ஆஸ்கர்

திரையுலகின் உயரிய விருதான 98-வது ஆஸ்கர் (அகாதமி) விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை கோலாகலமாகத் தொடங்கியது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வெற்றியாளர்களின் முழு விவரங்களைப் பார்க்கலாம். 

பிரபல நகைச்சுவை நடிகர் கோனன் ஓ'பிரையன் (Conan O’Brien) தொகுத்து வழங்கும் 98-வது ஆஸ்கர் விருது விழா, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல ஹாலிவுட் நட்சத்திரங்களின் வருகையோடு தொடங்கிய இவ்விழாவில், தொழில்நுட்பக் கலைகளுக்கும் சிறந்த நடிப்புக்கும் விருதுகள் குவிந்து வருகின்றன.

ஆஸ்கர்

இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய விருதுகள்:

சிறந்த துணை நடிகை: 'வெப்பன்ஸ்' (Weapons) திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய ஏமி மேடிகன் (Amy Madigan) சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'கே-பாப் டிமன் ஹண்டர்' (K-Pop Demon Hunter) படத்திற்குச் சிறந்த அனிமேஷன் திரைப்பட விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஆடை வடிவமைப்பு: கில்லர்மோ டெல் டோரோவின் இயக்கத்தில் வெளியான 'ஃபிராங்கண்ஸ்டைன்' (Frankenstein) திரைப்படம், அதன் பிரம்மாண்டமான மற்றும் நுணுக்கமான ஆடை வடிவமைப்பிற்காக (மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல் மற்றும் கிளியோனா ஃபியூரி) விருதை வென்றது.

சிறந்த திரைக்கதை (Original Screenplay): ரையன் கூக்ளர் இயக்கிய 'சின்னர்ஸ்' (Sinners) திரைப்படத்திற்குச் சிறந்த திரைக்கதைக்கான விருது வழங்கப்பட்டது. படத்தின் விறுவிறுப்பான மற்றும் ஆழமான கதைக்களத்திற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

2021க்கான ஆஸ்கர் விருது வென்றவர்கள் முழு பட்டியல்!

சிறந்த கதாபாத்திரத் தேர்வு (Best Casting): பால் தாமஸ் ஆண்டர்சனின் 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) படத்தில் நடித்த கசாண்ட்ரா மற்றும் குழுவினருக்குச் சிறந்த காஸ்டிங் பிரிவில் விருது கிடைத்தது.

சிறந்த அனிமேஷன் குறும்படம்: 'தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ்' (The Girl Who Cried Pearls).

சிறந்த ஒப்பனை (Makeup and Hairstyling): இந்தப் பிரிவிலும் 'ஃபிராங்கண்ஸ்டைன்' திரைப்படம் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி விருதைத் தட்டிச் சென்றது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, விழா நடைபெறும் இடத்தைச் சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல நட்சத்திரங்கள் போருக்கு எதிரான தங்களது கருத்துகளை ரெட் கார்ப்பெட்டில் பகிர்ந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.