JUST IN: தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 14 வயது மாணவன் தற்கொலை; பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
தாய்லாந்தில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ள நிலையில், தாக்குதல் நடத்திய சிறுவனும் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை 14 வயது சிறுவன் நடத்திய கொடூரத் தாக்குதலில் அவரது தாத்தா, பாட்டி, பள்ளி ஆசிரியர்கள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்போது சிகிச்சை பலனின்றி பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

பள்ளியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட அந்த 14 வயது சிறுவன், தாக்குதலுக்குப் பிறகு தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டில் தாய்லாந்து நாட்டில் நடைபெறும் இரண்டாவது பள்ளித் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இது என்பதால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். ஆசிய கண்டத்திலேயே பொதுமக்களிடம் அதிக அளவில் துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ள நாடுகளில் தாய்லாந்தும் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
