JUST IN: மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது - தபால் வாக்குகள் எண்ணும் பணி தீவிரம்!

 
'வாக்கு எண்ணிக்கை தேர்தல்

தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் திறக்கப்பட்டன.

தபால் ஓட்டு

வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுவாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

இத்தொகுதிகளில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, மதுராந்தகத்தில் 86.26 சதவீதமும், தாராபுரத்தில் 80.30 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தபால் வாக்குப்பதிவு

இத்தேர்தலில் தவெக, திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதால், இன்றைய தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. வாக்கு எண்ணிக்கை குறித்த அடுத்தடுத்த சுற்று நிலவரங்கள் விரைவில் வெளியாகும்.