JUST IN: திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்!

 
திருப்பரங்குன்றம் தீபத்தூண்

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த அழகர்சாமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று கார்த்திகை தீபத் திருநாளன்று கோயில் மரபுகளைக் காரணம் காட்டி உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றத் தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி, மதுரையைச் சேர்ந்த அழகர்சாமி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் எரியும் தீபச் சுடரிலிருந்து தீபம் எடுத்துச் சென்று, மலை உச்சியிலுள்ள அந்தத் தீபத்தூணிலும் விளக்கேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாகத் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டு வரும் கோயில் ஆகம விதிகள் மற்றும் மரபுகளைக் காரணம் காட்டி, நேற்று மாலை வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டுமே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண்

மலைத் தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து நேற்று திருப்பரங்குன்றத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சூழலில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.