JUST IN: திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூர் மாவட்டத்தில் திமுகவுக்கு பெரும் பின்னடைவு!

 
வேல்முருகன் வேல்முருகன்

கடந்த 2019 முதல் திமுகவுடன் பயணித்து வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு மற்றும் கொள்கை முரண்பாடு காரணமாகக் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறியுள்ளது.

த.வா.க தரப்பில் 2 தொகுதிகள் கோரப்பட்ட நிலையில், திமுக தலைமை 1 தொகுதி மட்டுமே ஒதுக்க முன்வந்ததாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். "தமிழகத்தில் தற்போது அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. என்னைக் கூட்டணியில் இருந்து வெளியேற்ற அதிகாரிகளே அறிவுறுத்தியுள்ளனர். அவர்களின் பேச்சைக் கேட்டு திமுக எங்களைப் புறக்கணிக்கிறது" எனக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வேல்முருகன்

இடங்களை விடச் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட தங்களின் 10 முக்கியக் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றவோ அல்லது தேர்தல் வாக்குறுதியாக ஏற்கவோ முன்வரவில்லை என்பது வெளியேற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், "பெரியண்ணன் பாணியில் திமுக எங்களைக் கையாள்வதை ஏற்க முடியாது. இடங்களுக்காக நாங்கள் விலகவில்லை; தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், எங்களின் 10 அம்சக் கோரிக்கைகளுக்காகவுமே இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களை விடக் கோரிக்கைகளே எங்களுக்கு முக்கியம்."

வேல்முருகன் - சீமான்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) த.வா.க இணையாது என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "எங்களின் 10 கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே இனி கூட்டணி வைப்போம்" என அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தவெக (விஜய்) அல்லது நாம் தமிழர் அல்லது அதிமுக பக்கமோ சாய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.