ஜஸ்ட் மிஸ்... தவெக பூத் கமிட்டி மாநாட்டுக்கு சென்ற போது தொண்டரின் பைக் கவிழ்ந்து கோர விபத்து!

 
 ஜஸ்ட் மிஸ்... தவெக பூத் கமிட்டி மாநாட்டுக்கு சென்ற போது தொண்டரின் பைக் கவிழ்ந்து கோர விபத்து!
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோவையில்  சரவணம்பட்டியில் அமைந்துள்ள கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் காலை கோவை வந்திருந்த நிலையில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

இதனைத்தொடர்ந்து திறந்த வெளி வாகனத்தில் நடிகர் விஜய் ரோடு ஷோ நடத்தினார். இன்று மாலை தற்போது பூத் கமிட்டி மாநாடு தொடங்கியுள்ள நிலையில் நடிகர் விஜய் ஹோட்டலில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு காரில் புறப்பட்டார்.

அவரை தொடர்ந்து ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் பின்னாலேயே  சென்றனர். அப்போது பைக்கில் சில தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் நடிகர் விஜய்யின் காரை நெருங்க முயற்சித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பைக் கவிழ்ந்து கோரவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த தொண்டர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இது  குறித்த  வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்  வைரலாகி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web