ஒரே ஒரு நாள் டைம்... 7,783 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் ...

 
தமிழக அரசு அதிரடி! அங்கன்வாடி மையங்களில் சத்துணவு!

தமிழகத்தில் அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மொத்தம் 7,783 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதில் 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறுஅங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.

அங்கன்வாடி மையத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

இந்த பணியிடங்கள் நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளன.  அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக நலத்துறையால் வெளியிடப்பட்டது. நாளையே விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் பணிபுரிய  விரும்பும் பெண்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் புதன்கிழமை நாளை மாலை 5 மணி வரை அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

அங்கன்வாடி

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறுஅங்கன்வாடி பணியாளர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு 25-35 ஆகும். விதவைகள், ஆதரவற்ற மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு வயது வரம்பு 40. அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி வேண்டும். விண்ணப்பதாரர்கள், அந்த மையம் உள்ள கிராமம் அல்லது அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web