JUSTICE 4 MOUMITA | பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!
இந்நிலையில், மருத்துவ மாணவியின் கொலையைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் 66 இடங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி பாஜகவினர் மெளன ஊர்வலம் நடத்தப் போவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
ஆனால், மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் செல்வதற்கு தமிழக காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, அந்தந்த மாவட்ட பாஜக அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் கோடம்பாக்கம் அஜீஸ் நகரில் மாநில செயலாளர் பிரமிளா சம்பத் தலைமையில் பெண் நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். நுங்கம்பாக்கத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னையில் 6 இடங்களில் பாஜக பெண் நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
