சென்னை உயர் நீதிமன்ற 34வது தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார்!
சென்னை உயர் நீதிமன்றத்தின் 34வது தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்று கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் அவர்களை கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இதனை தொடர்ந்து கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற கே.ஆர்.ஸ்ரீராமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!