செந்தில் பாலாஜி மனுவை விசாரித்து வந்த நீதிபதி மோகனா திடீர் விலகல்!

 
செந்தில் பாலாஜி அசோக்

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து, உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா விலகியுள்ளார்.

வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகியுள்ளதால், தார்மீக அடிப்படையில் இந்த விசாரணையில் இருந்து தாம் விலகுவதாக நீதிபதி மோகனா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா பக்சி ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு இம்முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

செந்தில்பாலாஜி செந்தில்

2021-2025 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த போது, டாஸ்மாக் மதுபானக் கொள்முதல், பார்களுக்கான உரிமம் வழங்கியது மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாகச் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தள்ளுபடி செய்தார். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துச் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.