குடும்பத் தகராறில் மனைவியின் கையைக் கடித்துக் குதறிய கணவர் கைது!

 
தென்காசி

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இல்லத்தார் வடக்குத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (32) மற்றும் அவரது மனைவி மாலா (30) ஆகியோருக்கு இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரமடைந்த மணிகண்டன், மனைவி மாலாவின் கையைப் பலமாகக் கடித்துக் குதறியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாலா அலறித் துடித்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாலா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, மனைவியைத் தாக்கிக் காயப்படுத்திய மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.குடும்பத் தகராறில் கணவரே மனைவியின் கையைக் கடித்துக் குதறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது