குருவாயூர் கோவிலில் கோலாகலமாக நடந்த காளிதாஸ் ஜெயராம் திருமணம்.. போட்டோஸ் வைரல்!

 
 காளிதாஸ் ஜெயராம்

தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். இவர் தனுஷின் ராயன் படத்தில் தம்பி வேடத்தில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் தமிழ் மட்டுமின்றி பல மலையாள படங்களில் நடித்துள்ளார். சில தமிழ் படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் மீன்குழம்பும் மண்பானையும், காதல், விக்ரம், பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அவர் நடித்த பாவ கதைகள் வெப் தொடரில் திருநங்கையாக காளிதாஸின் நடிப்பு பாராட்டப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய  விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர்.

இந்நிலையில், காளிதாஸ் ஜெயராம் பிரபல மாடல் தாரிணி காளிங்கரை நீண்ட காலமாக காதலித்து வருகிறார், இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில்  இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இவர்களது திருமணம் இன்று கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் கோலாகலமாக நடந்தது. திருமண புகைப்படங்கள் தற்போது  வெளியாகிய நிலையில், புதுமண தம்பதிக்கு வாழ்த்துகள் குவித்து வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!