'கல்கி 2898 AD' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'கல்கி 2898 AD' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 AD' திரைப்படம் கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியானது.

மகாபாராத போரின் இறுதியையும் கல்கி அவதாரத்தையும் ஒன்றிணைத்து கற்பனை கதை அமைத்திருந்தார் இயக்குநர் நாக் அஸ்வின். அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்டப் பலர் இதில் நடித்திருந்தனர். இதில் கமல்ஹாசன் வில்லனாக கிளைமாக்ஸ் காட்சியில் வந்தார். இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் இன்னும் விரிவாக வரும் என்பதையும் இயக்குநர் படம் வெளியாகும் முன்பு சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 1000 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. ரூ. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை ரூ. 200 கோடி கொடுத்து பிரைம் ஓடிடி தளம் பெற்றிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாகிறது. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இந்தியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
