முதல்வரே இப்பவாவது நடவடிக்கை எடுங்க... கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம்... கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ள புகார் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையத்திடமும் அவர் முறையிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, தம்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவை அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் என்றும், எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
