கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்... தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்!

 மதுரை சித்திரை விழா  உலகப் பிரசித்தி பெற்றது.  நடப்பாண்டில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது .  சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இதனையடுத்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் வெகுவிமரிசையாக நடைபெறும். ஏப்ரல் 23ம் தேதி  சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளழகர்
பொதுவாக  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் பக்தர்கள் பலர்  ஆற்றங்கரையில்  வாசனை திரவியங்கள் கலந்த தண்ணீரை கள்ளழகர் மீது பீய்ச்சி  அடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.  உயர் அழுத்தம் கொண்ட மோட்டார்கள் மூலமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுவதும் வாடிக்கை தான். இதனால் பல்லக்கு தூக்கிகளுக்கும்,  கள்ளழகர் சிலை மற்றும் ஆபரணங்களுக்கு சேதம் ஏற்படலாம்.  பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் மக்கள் சிரமப்படுவார்கள் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

கள்ளழகர்


இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வில்  உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பாரம்பரிய முறையில், தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும். அவ்வாறு தண்ணீர் பீய்ச்சுபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


கள்ளழகர், அழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரும் வரை இடையே எந்த இடத்திலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது. இதனை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், ஆணையரும்  உறுதிசெய்ய வேண்டும். அத்துடன்  பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல்துறையினர் தடுகக் வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web