இன்று இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Updated: Mar 24, 2024, 19:26 IST
பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை சென்டிரல்- திருப்பதி இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று திருப்பதி செல்லும் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், புதுச்சேரியிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16112) ரத்து செய்யப்படுகிறது. அதே போன்று மறுமார்க்கமாக, திருப்பதியிலிருந்து காலை 4 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16111) இன்று மார்ச் 24 ஆகிய தேதி ரத்து செய்யப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
From
around the
web