“தமிழுக்கு இழைக்கப்பட்ட அவமானம்!” – பெரியார் அறிவுலக நூல் சர்ச்சையில் கமல்ஹாசன் கடும் கண்டனம்

 
கமல்

 

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் போலி நூல்கள் தமிழுக்கு மிகப்பெரிய அவமானம் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நூல்களை வாசித்து, அவற்றில் உள்ள தகவல்களைப் பேச்சு, எழுத்து மற்றும் ஆய்வுகளில் பயன்படுத்தினால், தமிழ் மொழியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், சம்பந்தப்பட்ட நூல்களை அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்ட பதிப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Officials clarify when the Periyar Library in Coimbatore will open - 'கோவை பெரியார் நூலகம் திறக்கப்படுவது எப்போது?' – அதிகாரிகள் விளக்கம் என்ன? - Vikatan

இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.இதற்கிடையே, புகார்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்