மநீம தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு... பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு!

 
கமல்
 

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவராக கமல் ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

வருஷத்துக்கு ரூ. 11 கோடி!!  ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! கமல்ஹாசன் ஆவேசம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் 1,414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன்.

கூட்டத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராக மீண்டும் கமல் ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிராக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

From around the web