வைரல் வீடியோ... கணவருடன் கடைக்கு சென்ற கமலா ஹாரிசுக்கு குவியும் கண்டனங்கள்!

 
கமலா ஹாரிஸ்

 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் கமலா ஹாரிஸ். இந்நிலையில், கமலா ஹாரிஸ், அவருடைய கணவர் டக் எம்ஹாப் உடன்  கலிபோர்னியா மாகாணத்தில் வெஸ்ட்உட் பகுதியில் உள்ள ராஞ்ச் மார்கெட் ஆசியன் மளிகை கடைக்கு சென்றனர்.


 


இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது.  இதனை பார்த்த நெட்டிசன்களில் சிலர் வீடியோ காட்சிகளை கவனித்து, கமலா ஹாரிசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  ஷாப்பிங் செய்ய சென்ற ஹாரிஸ், உடன் பிளாஸ்டிக் பைகளை வைத்துள்ளார்.   2019 தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அதனை தடை செய்ய வேண்டும் என பேசியிருந்தார்.

#BIG NEWS: அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ்!! அந்த 1 மணி 25 நிமிஷங்களும் செம கெத்து!!

ஆனால், புதிய வீடியோவில் பிளாஸ்டிக் பைகளுடன் காணப்பட்ட ஹாரிசுக்கு கண்டன பதிவுகள் வெளியிடப்பட்டன. ஒருவர், நான் கூட பிளாஸ்டிக் பைகள் எல்லாம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை என நினைத்து விட்டேன் எனவும், மற்றொருவர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வேண்டும் எனவும் ஹாரிஸ் விரும்பினார். அதனை நான் நினைவுகூர்கிறேன் என கூறியுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web