முல்லைப் பெரியாறு உரிமைக்காகப் போராடிய கம்பம் கே.எம். அப்பாஸ் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

 
ஸ்டாலின்

 

முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்து களமாடிய கம்பம் கே.எம். அப்பாஸ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உழவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் களப்பணியையும் கருத்தியல் தெளிவையும் இணைத்துச் செயல்பட்டவர் அப்பாஸ் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

முல்லை பெரியாறு அணை உரிமைக்காக போராடிய கம்பம் அப்பாஸ் மறைவு: அன்புமணி இரங்கல் Kambum Abbas, who fought for the rights of Mullaperiyar Dam, passes away: Anbumani condoles

அப்பாஸின் மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.