அறுந்த மின்கம்பி... அக்கா, தம்பி 2 சிறார்கள் பலி! கமுதி அருகே சோகம்!

 
ramanathapuram

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி அக்கா, தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி நிறைமதி (10), அவரது தம்பி பாலபிரவீன் (5). இருவரும் அப்பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

அப்போது அங்கு அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை இருவரும் தொட்டதாகவும், இதில் மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த இரு சிறார்களின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

மேலும், மின்கம்பி அறுந்து விழுந்தது எப்படி, சம்பவம் நடைபெற்றபோது மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்ததற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் அச்சங்குளம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.