கபடி போட்டி முன்விரோதம்... பேருந்துக்காக காத்திருந்த 26 வயது இளைஞர் கத்தியால் குத்திக்கொலை!

 
கமுதி

 

ராமநாதபுரம்: கமுதி அருகே பேருந்துக்காக காத்திருந்த இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேருந்து நிறுத்தத்தில் சக்திவேல் (26) என்பவர் பேருந்துக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சிவகுமார் என்பவருக்கும் சக்திவேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றிய நிலையில், சிவகுமார் கத்தியால் சக்திவேலின் தலையில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்புலன்ஸ்

இந்த சம்பவத்துக்கு இருவருக்கும் இடையே ஏற்கனவே இருந்த முன்விரோதமே காரணம் என கூறப்படுகிறது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கபடி போட்டியின்போது ஸ்பான்சர் பெயரை மைக்கில் அறிவிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், தற்போது பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மீண்டும் முற்றி, கொலையில் முடிந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலைக்கான காரணம், சம்பவத்தின் முழுமையான பின்னணி உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கபடி போட்டியில் ஏற்பட்டதாக கூறப்படும் பழைய தகராறு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு கொலை சம்பவமாக மாறியிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.