காஞ்சிபுரத்தில் 8 வயது ஜார்கண்ட் சிறுமி மாயம் – போலீசார் தீவிர தேடுதல்

 
jaarkhand

 

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கல்பனா என்பவர் கணவரைப் பிரிந்து தனது 8 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோர் மற்றும் மகளுடன் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி பகுதிக்கு குடிபெயர்ந்தார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கல்பனா வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், துர்கா பூஜைக்காக 4 நாட்களுக்கு முன்பு கல்பனா ஜார்கண்ட் சென்றுள்ளார். சிறுமி தாத்தா, பாட்டியுடன் இருந்தபோது, 3 நாட்களுக்கு முன்பு தனியாக நெடுஞ்சாலை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு சிறுமி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குடும்பத்தினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.