கந்த சஷ்டி விழாவுக்கு திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்… 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 
திருச்செந்தூர்

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, நவம்பர் 15-ம் தேதி மொத்தம் 4 சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

சிறப்பு ரயில்களின் நேரம்

  • ரயில் எண் 06001: திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

  • ரயில் எண் 06002: திருச்செந்தூரில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு 8.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

  • ரயில் எண் 06004: திருச்செந்தூரில் இருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

  • ரயில் எண் 06003: திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

எந்தெந்த நிலையங்களில் நிற்கும்?

திருச்செந்தூர்

இந்தச் சிறப்பு ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். முன்பதிவில்லா சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் இவற்றில் பொதுப் பெட்டிகளும் சரக்கு பெட்டிகளும் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.