த்ரிஷா - உதயநிதி விவகாரம் - நடிகை கங்கனா ரணாவத் விமர்சனம்!
Sep 9, 2026, 07:22 IST
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இடையிலான தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களுக்கும், அவதூறு பிரச்சாரங்களுக்கும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கங்கனா ரணாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹிமாசலப் பிரதேச மாநிலம் குல்லுவில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஓர் ஆண் மற்றும் பெண் இடையிலான உறவு குறித்து விவாதிக்கப்படும் போதெல்லாம், எப்போதும் பெண்ணின் கண்ணியம் மட்டுமே மலிவான முறையில் விவாதப் பொருளாக்கப்பட்டு கொச்சைப்படுத்தப்படுவதாக கங்கனா ரணாவத் குற்றம்சாட்டினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், கங்கனாவின் இந்தக் கருத்துகள் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
