”அதிகரிக்கும் இளம் விதவைகள்.. கனிமொழி தான் காரணம்”.. திமுகவை சீண்டும் எச். ராஜா..!
விருதுநகரில் தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு மறுப்பதாக கூறுவது தவறு. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களுக்குக் கிடைத்த நிதியின் பங்கு 32 சதவீதமாக இருந்தது. குஜராத் முதல்வராக இருந்தபோது, மாநிலத்தின் நிதி ஆதாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். மோடி பிரதமரான உடனேயே மத்திய நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்று மாநிலங்களுக்கான நிதிப் பங்கு 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இது சட்டமாக கொண்டு வரப்பட்டபோது, திமுக எம்பி சிவா பாராட்டினார். சென்னையில் வெள்ள நீர் வடிகால் அமைக்க 4,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக தெரிவித்தனர். தற்போது, 42 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக, துறை அமைச்சர் தெரிவிக்கிறார். மீதி 58 சதவீத பணத்தை என்ன செய்தார்கள்? தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் அதிக வருவாய் ஈட்டுகின்றன. இந்த நிதியை மற்ற மாவட்டங்களுக்கு செலவு செய்யக்கூடாது என்று மூன்று மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொன்னால் எப்படி இருக்கும்?
தமிழகத்தில் 2014 தேர்தலில் மாநகராட்சிகளின் கூட்டணி இல்லாமல் 19.5 சதவீத வாக்குகளை பாஜக பெற்றது. தமிழகத்தில் இளம் விதவைகள் அதிக அளவில் இருப்பதற்கு டாஸ்மாக் தான் காரணம். திமுக ஆட்சி அமைந்தவுடன் மதுவை ஒழிப்போம் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மேலும் இளம் விதவைகள் உருவாக கனிமொழியும், தி.மு.க அரசும் தான் காரணம் என்றார் ஹெச்.ராஜா.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!