வேடநத்தம் மாணவி படுகொலை - கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்!

 
தூத்துக்குடி கனிமொழி தூத்துக்குடி கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே படுகொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் இன்று ஆறுதல் கூறினர்.

தூத்துக்குடி மானவி பாலியல் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மற்றும் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்றனர்.

தூத்துக்குடி

மகளை இழந்து வாடும் மாணவியின் பெற்றோரைச் சந்தித்து தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அரசு தரப்பில் செய்யப்படும் என உறுதி அளித்தனர். சம்பவம் குறித்து விரிவாகக் கேட்டறிந்த கனிமொழி எம்.பி., குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம் என்று தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.