ரூ.16 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது!
வெளிமாநிலங்களில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளுக்குக் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுப்பதற்காகப் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சித்தூரிலிருந்து இருவாரம் கிராமத்திற்குச் செல்லும் முக்கியச் சந்திப்புப் பகுதியில் உள்ள பெங்களூரு சாலையில் உள்ளூர் போலீசார் திடீரென அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்தக் காரை சோதனையிட்ட போது அதற்குள் மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் இருக்கும் என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இது தொடர்பாகக் காரில் வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தீட்சித் சுக்ரித் மற்றும் முரளிதர்புராடி ஆகிய 2 வாலிபர்களை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில், சித்தூர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சில முக்கிய நபர்களுக்கு இந்தக் கஞ்சாவைக் கடத்த முயன்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்து தற்போது தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிடிபட்ட 2 ஒடிசா வாலிபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் அவர்களைச் சித்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
