ஒருவர் மீது ஒருவர் கலர் சாயங்கள் பூசி, மஞ்சள் நீர் ஊற்றி கொண்டாடும் கன்னிப் பொங்கல்!

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து வருபவர்கள் சொந்த ஊருக்கு வந்து கன்னிப் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். நாகை மாவட்டத்தில் வெளிப்பாளையம், தாமரை குள தெரு, வாய்க்கால் கரை தெரு, பெருங்கடம்பனூர், தேவூர், கீழ்வேளுார், காக்கழனி, வலிவலம் பகுதிகளில் கன்னிப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து விளையாட்டுப் போட்டிகள், பானை உடைத்தல் கோலப்போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
ஒருவர் மீது ஒருவர் கலர் சாயங்கள் பூசியும், மஞ்சள் நீர் ஊற்றியும் அன்பை வெளிப்படுத்தினர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் முழுவதும் பெண்கள் கலந்து கொள்ளும் சுற்றுச்சூழல் மற்றும் புவி வெப்பமாவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வண்ண கோல போட்டியும் நடைபெற்றன. அதே போல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று கும்மி கொட்டி கொண்டாடி அன்பை பரிமாறிக் கொண்டனர்.
மேலும் கூட்டாஞ்சோறு எனப்படும் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர். வெளி மாநிலங்களிலும், பிற மாவட்டங்களிலும் பணி நிமித்தமாக சென்றுள்ளவர்கள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!