கன்னியாகுமரியில் 14 வயது பள்ளி மாணவி திடீர் மாயம்! 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல்

 
kanyakumari

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 14 வயது பள்ளி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை மீட்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

போலீஸ்

கருங்கல் அருகே மிடாலம் உதயமார்த்தாண்டம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சரவணனின் மகள் முத்து (14), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 15-ம் தேதி இரவு குளச்சலில் நடைபெற்ற கோவில் சூரசம்ஹார திருவிழாவின்போது, சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

சிறுமி தங்கியிருந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக வந்து சென்றதாகவும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடத்தல் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளச்சல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கோவில் வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்