கன்னியாகுமரியில் மார்ச் 22ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு - பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா!

 
டாஸ்மாக் டாஸ்மாக்

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா வரும் மார்ச் 22, 2026 அன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் குறிப்பிட்ட பகுதிகளில் மதுபான விற்பனைக்குத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விடுத்துள்ள உத்தரவின்படி, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003, பிரிவு 12(2)-ன்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, திருவிழா நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

பாட்டக்கரை பத்ரகாளி அம்மன் தூத்துக்குடி

மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று  கன்னியாகுமரி மாவட்டத்தில் நித்திரவிளை, கொல்லங்கோடு, நடைக்காவு, மற்றும் ஊரம்பு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும் என் றும், கொல்லங்கோட்டில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ‘ஹோட்டல் ஒயாசிஸ் இன்டர்நேஷனல்' மதுபான பார் ஆகியவையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா என்பது உலகப்புகழ் பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் 'தூக்கக் காரர்களால்' உயரே தூக்கிச் சுமக்கப்பட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்தப்படுவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், எவ்வித அசம்பாவிதமும் இன்றித் திருவிழாவை நடத்த இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் அல்லது விதிகளை மீறிப் பார்களைத் திறந்து வைப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.