Insta காதல் விபரீதம்! பிளஸ்-2 மாணவியை அடுத்தடுத்து 4 பாலியல் பலாத்காரம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் Instagram மூலம் பழகிய பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மைனர் மாணவி தொடர்பான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

ஒரு வாரத்துக்கு பிறகு மாணவி மீண்டும் வீட்டுக்கு திரும்பிய நிலையில், அவரிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் சம்பவங்களை மாணவி தெரிவித்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், Instagram மூலம் தனக்கு அறிமுகமான இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியதாகவும் கூறியதாக தெரிகிறது.மாணவியை தனியாக அழைத்துச் சென்ற அந்த இளைஞர், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாகவும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் மாணவி மற்ற சிலரின் தொடர்புக்கும் சென்றதாகவும், அவர்களும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, மாணவியின் காதலன் என கூறப்படும் அஜன், விவேக், தினேஷ் மற்றும் ஆன்றோ ஜெரிஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.மைனர் மாணவி தொடர்பான இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
