அடுத்தடுத்து மோதிய பைக்குகள்... தூக்கி வீசப்பட்ட 13 வயது சிறுமி பரிதாப பலி!

 
கன்னியாகுமரி

 

கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 13 வயது சிறுமி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

மத்திக்கோடு பகுதியில் 19 வயது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சிறுமியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படும் அந்த பைக், எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியது. தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர மின்கம்பத்திலும் பலமாக மோதியது.

இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த 13 வயது சிறுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைக்கை ஓட்டி வந்த 19 வயது இளைஞரும் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதியினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அதிவேகமே விபத்துக்குக் காரணமா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.