உச்ச நீதிமன்றத்தின் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது - கபில் சிபல் வேதனை!

 
கபில் சிபல்

வாக்காளர் பட்டியல் தொடர்பான முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் உரிய நிவாரணம் கிடைக்காதது குறித்து மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல் தனது ஆழமான வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கபில் சிபல்

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட SIR முறைகேடுகள் மற்றும் தவறுதலாகப் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரங்கள் தொடர்பாகப் பலமுறை உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ச்சியாக முறையிட்டும் உச்ச நீதிமன்றத்திடமிருந்து உரிய நிவாரணமோ அல்லது நீதியோ கிடைக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

டெல்லி தடியடி

"உச்ச நீதிமன்றத்திற்கு மீண்டும் மீண்டும் சென்று நான் முற்றிலும் சோர்வடைந்துவிட்டேன்; இனி அங்கு செல்வதால் எந்தப் பயனும் இருக்கும் எனத் தோன்றவில்லை" என்று அவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.