நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை... சிவகங்கையில் பரபரப்பு!

 
நவீன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காரைக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகேசனின் மகன் நவீன் (26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வீடு உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில், கல்லல் பகுதியில் நண்பர்களுடன் இருந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தனியாகச் சென்ற நவீனை, 7 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று கொலை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்தக் கொலை தொடர்பாக தெற்குத் தெருவைச் சேர்ந்த 7 பேரைப் பிடித்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.