காரைக்குடியில் வளர் தமிழ் நூலகம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

 
காரைக்குடி ஸ்டாலின்
 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை வளர்தமிழ் நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.12 கோடி செலவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியாா் நினைவு கலையரங்க வளாகத்தில் 'வளர் தமிழ் நூலகம்' ஒன்றை உருவாக்கியுள்ளனர். 

அழகப்பா பல்கலைக் கழகம்

இந்த நூலகத்தை இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னா் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகக் கட்டடத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவா் உருவச் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.

அழகப்பா பல்கலைக் கழகம்

நாளை ஜனவரி 22ம் தேதி சிவகங்கையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்குவேலி அம்பலம் சிலையை திறந்து வைக்கிறாா். பின்னா் சிவகங்கை மன்னா் அரசுக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதல்வா் பங்கேற்று, சுமாா் 40,000 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web