அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கரன் சர்மா அறிவிப்பு!
இந்திய சுழற்பந்து வீச்சாளரான கரன் சர்மா, சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகள் உட்பட அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
38 வயதான கரன் சர்மா, தற்போது நடைபெற்று வரும் யுபி டி20 லீக் தொடரில் தீவிரமாக விளையாடி வந்த நிலையில், இத்திடீர் ஓய்வு முடிவை வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தனது நீண்டகால கிரிக்கெட் பயணத்தில் ஐபிஎல் தொடர்களில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட இவர், 90 போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 83 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள கரன் சர்மா, கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் விளையாட்டுத் துறையிலேயே தொடரப் போவதாகவும், வரும் நாட்களில் பயிற்சியாளராக தனது புதிய அவதாரத்தைத் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
