கார்கில் போர்.. இந்தியாவில் ஊடுருவியது உண்மை தான்.. 25 வருடங்களுக்கு பின் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் ராணுவம்!

 
 ராணுவ ஜெனரல் அசீம் முனீர்

கார்கில் போர் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு. 1999ல் நடந்த கார்கில் போரில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்தனர்.1991ல் லடாக்கில் உள்ள கார்கிலில் பாகிஸ்தான் படையெடுத்தது தெரியவந்ததும் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்தது. கார்கில் போர் வெற்றியின் 25வது ஆண்டு நினைவு தினம் கடந்த ஆண்டு ஜூலை 26ம் தேதி அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில், கார்கில் போருக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் சம்பந்தம் இல்லை என பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், முதல் முறையாக இந்தியா மீது பாகிஸ்தான் படையெடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.ராவல்பிண்டியில் நேற்று நடந்த பாதுகாப்பு தின விழாவில் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசீம் முனீர் பேசினார். இந்தியாவுடனான பல்வேறு போர்களில் தாய்நாட்டைக் காக்க ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்றார். பாகிஸ்தான் ஒரு துணிச்சலான மற்றும் வீரமிக்க நாடு என்பதில் சந்தேகமில்லை.

நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது எப்படி என்று தெரியும். 1948, 1965, 1971, கார்கில் போர், சியாச்சின் போரில், நாட்டின் பாதுகாப்புக்காகவும், கவுரவத்திற்காகவும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். மேலும் இதன் மூலம் கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்குள் நுழைந்ததை முதன்முறையாக அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!