“தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவது மிகவும் கடினம்” - கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்!

 
மேகதாது

கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளதாலும், போதுமான மழை பெய்யாததாலும் தற்போதைய சூழலில் தமிழகத்திற்குக் காவிரி நீரைத் திறப்பது சாத்தியமில்லை என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், தேவையான அளவு மழை பொழியாததால் அணைகளில் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கே குறைந்த அளவிலேயே நீர் இருப்பு இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

காவிரி மேகதாது

காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்துப் பேசிய அவர், போதுமான நீர் இருப்பு இருந்தால் வழங்குவதில் தங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார். ஆனால், தற்போதைய இக்கட்டான சூழலில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது இயலாத காரியம் என்று அவர் கூறினார்.

சிவக்குமார்விஜய் விஜய்சிவக்குமார் மேகதாது

தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரி பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்படும் என்றும் டி.கே.சிவக்குமார் உறுதியாகத் தெரிவித்துள்ளார். காவிரி நீர்ப்பகிர்வு விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அரசியல் மற்றும் விவசாய வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.