"விஜய் பிரதமராவது பற்றி பேச விரும்பவில்லை" - கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

 
டி.கே.சிவக்குமார்

சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

தென் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்றும், 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும் அமித் ஷாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவக்குமார்விஜய் விஜய்சிவக்குமார் மேகதாது

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் இக்கோரிக்கையில் ஒரே முடிவில் உறுதியாக உள்ளன. நதிநீர் பிரச்சனைகள் குறித்துத் தனிக் கூட்டம் கூட்டி அமைதியான முறையில் தீர்வு காண மத்திய அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேகதாது அணையில் 5 டி.எம்.சி குடிநீரைத் தவிர வேறு ஒரு சொட்டு நீரைக் கூட கர்நாடகா பயன்படுத்தாது என அமித் ஷா முன்னிலையில் வாக்குறுதி அளித்துள்ளதாகக் கூறினார்.

எஞ்சிய நீர் அனைத்தும் மேகதாது அணையில் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குத்தான் செல்லும் என்பதால் இரு மாநிலங்களும் நிம்மதியாக இருக்கலாம் என்றும், இந்த அணை உங்களுக்காகத்தான் கட்டப்படுகிறதே தவிர எங்களுக்காக அல்ல என்றும் விளக்கமளித்தார்.

விஜய் சிவக்குமார்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரதமராவார் என அக்கட்சியின் எல்.எல்.ஏ-க்கள் கூறுவது குறித்துத் தான் எதுவும் பேச விரும்பவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

"முதலில் நாட்டை ஒருங்கிணைத்துக் கட்டியெழுப்புவோம். பெரிய விஷயங்கள் குறித்து இப்போது பேச வேண்டாம், நாமெல்லாம் இன்னும் இளமையாக இருக்கிறோம்" எனக் கூறிப் பதிலளித்தார்.