கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை - முதல்வர் விஜய் கண்டனம்!

 
விஜய்

கர்நாடக மாநிலக் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரச் சம்பவத்திற்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது பலத்த கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.

கர்நாடகாவில் 3 தமிழர்கள்

"கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுகாவைச் சேர்ந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 பேரும் ஆகஸ்ட் 15 அதிகாலையில் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்."

கர்நாடக வனத்துறை தமிழர்கள் கொலை

இச்சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை அளித்துள்ள சமாதான விளக்கங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இந்த கொடூரச் சம்பவம் குறித்து நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும். உடனடியாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்த வனத்துறை அதிகாரிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

இது போன்ற மனித உரி மீறல் சம்பவங்கள் இனிவரும் காலங்களில் மீண்டும் நடைபெறாமல் இருக்கக் கர்நாடக அரசு உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.