கர்நாடக கலாட்டா ... காங்கிரஸ்னா சட்ட கிழியுறது சகஜம்தானேய்யா !!

 
கர்நாடக தேர்தல்


கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 136 இடங்களில் வென்று காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யாவுக்கும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று டெல்லிக்கு வரச்சொல்லி இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சித்தராமையா சென்றுவிட்டார், ஆனால் சிவக்குமார் சினம் கொண்டு போகாமல் தவிர்த்துவிட்டார்.

கர்நாடக தேர்தல்
இதற்கிடையில், கர்நாடக அமைச்சரவையில் துணை முதல் வர் பதவியும், 5 முக்கிய துறைகளையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கர்நாடகா சன்னி வக்பு போர்டு தலைவர் ஷபி சாடி கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது...தேர்தலுக்கு முன்பு. முஸ்லிம்களின் ஆதரவை காங்கிரஸ் கேட்டபொழுது இந்த தேர்தலில் முஸ்லிம்கள் 30 பேருக்கு ஷபி சாடி சீட் கொடுக்க வேண்டும். வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று பேசப்பட்டு அதற்கு காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. ஆனால், தேர்தலில் 15 முஸ்லிம்களுக்கு மட்டுமே காங்கிரஸ் சீட் வழங்கியது, அதில் 9 பேர் வெற்றிபெற்றுள்ளனர். என தேர்தலுக்கு முன் காங்கிரஸ் அளித்த உத்தரவாதங்களை போட்டு உடைத்தார்

 கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு எங்களது பங்கு முக்கியமானது. 72 தொகுதிகளில் எங்களால் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளிலும் நாங்கள் கடுமையாக உழைத்தோம். காங்கிரசுக்கு நாங்கள் நிறைய கொடுத்துள்ளோம். அதை காங்கிரஸ் திருப்பிக் கொடுக்க இதுவே சரி தருணம் துணை முதல்வர் மற்றும் ஐந்து அமைச்சர்கள் அதுவும் உள்துறை, வருவாய், கல்வி உள்ளிட்ட நல்ல துறைகளை ஒதுக்கவேண்டும். எங்களுக்கு நன்றி செலுத்த வேண்டிய கடமை காங்கிரசுக்கு இருக்கிறது எனக்கூறி அதிரவைத்திருக்கிறார்.எங்களின் உழைப்புக்கு முதல்வர் பதவியையே தரவேண்டும். ஆனால், துணை முதல்வர் என்பதில் இருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம்.

ராகுல் முஸ்லீம்

இவ்வாறு அவர் கூறியுள்ளார் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, முஸ்லிம் அமைப்புகளுடன் காங்கிரஸ் கட்சி பேரம் பேசியிருப்பது ஷபி சாடியின் பேட்டி மூலம் அம்பலமாகியுள்ளது. அவரது இந்த பேட்டி கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க சண்டை என்றால் சட்டை கிழிவது சகஜம்தானே என வடிவேலு பாணியில் அவர்களுக்குள்ளாகவே இருக்கும் மோதல் முற்று பெறாத நிலையில் இவர் போட்டிருக்கும் பொக்ரான் குண்டு இன்னும் வெடிக்காமல் இருக்கிறது.தேர்தல் முடிவு கருத்து கணிப்புகளில் தொங்கு சட்டசபை எனக்கூறி வந்தாலும் இப்படி அதிகப்படியான இடங்களில் வென்றும் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியாமல் திணறிவருவது கர்நாடக மக்களிடியே கவலையை அதிகரித்திருக்கிறது.

From around the web