இனி அரசு மானிய ஆட்டோக்களுக்கு மஞ்சள் – சிவப்பு நிறம் கட்டாயம்! கர்நாடக அரசு புதிய உத்தரவு

 
ஆட்டோ

 

கர்நாடக மாநிலத்தில் அரசின் மானியத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய விதிமுறையை மாநில அரசு அறிவித்துள்ளது.

TOI Bengaluru on X: "Karnataka govt mandates Yellow-Red colour scheme & official state emblem on all vehicles, equipment distributed under various government schemes. Rule applies to autorickshaws, cars, street vending vehicles and

இதன்படி, அரசின் நிதியுதவியுடன் வழங்கப்படும் ஆட்டோக்கள், கார்கள், தெருவோர வியாபார வாகனங்கள் மற்றும் இதர இயந்திர உபகரணங்களில் கர்நாடக மாநிலக் கொடியின் நிறங்களான மஞ்சள், சிவப்பு பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், அந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்களில் கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையும் இடம்பெற வேண்டும்.

அரசின் உதவியுடன் பெறப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்களைப் பொதுமக்கள் எளிதில் அடையாளம் காண்பதே இந்த முடிவின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை அரசுத் துறைகள், வாரியங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது