91 வயது மூதாட்டி மீது திடீரென பாய்ந்த குரங்கு- சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு.. வைரலாகும் CCTV வீடியோ
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் வீட்டின் வளாகத்தில் நடந்து சென்ற 91 வயது மூதாட்டியை குரங்கு தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொப்பல் மாவட்டம் பி.டி. பாட்டீல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நஜமுனிசா பேகம், வயது 91. கடந்த 19-ம் தேதி இரவு வீட்டின் வராண்டா பகுதியில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்புறத்தில் சத்தம் கேட்டதால், அங்கு சென்று பார்த்துள்ளார்.
அந்த நேரத்தில் வீட்டின் வளாகத்திற்குள் புகுந்திருந்த குரங்கு, மூதாட்டியை பார்த்ததும் அவரை நோக்கி ஓடி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து குரங்கு இரு கால்களால் அவரை தாக்கியதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரால் உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை.
91-YEAR-OLD WOMAN DIES AFTER MONKEY ATTACK
— The Angle (@Theangleportal) September 22, 2026
A shocking incident was reported from BT Nagar in Karnataka, where a 91-year-old woman allegedly died following a monkey attack.
The elderly woman reportedly suffered a fatal fall/injury during the incident and died at the spot.
The… pic.twitter.com/QRdEqeyIaM
மூதாட்டியின் சத்தம் கேட்டு அவருக்கு உதவுவதற்காக மற்றொரு பெண் வெளியே வந்தார். அவர் கீழே விழுந்து கிடந்த நஜமுனிசா பேகத்தை தூக்க முயன்றபோது, சுவரில் இருந்த குரங்கு மீண்டும் பாய்ந்து அந்தப் பெண்ணையும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கும் காயம் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகளில் குரங்கு திடீரென மூதாட்டியை நோக்கி பாய்ந்து தாக்குவதும், பின்னர் உதவ வந்த பெண்ணை நோக்கி செல்வதும் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நஜமுனிசா பேகம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குரங்கு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
91 வயது மூதாட்டியை குரங்கு தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்திய சம்பவமும், அதனை தொடர்ந்து வெளியான CCTV காட்சிகளும் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
